‘மாஸ்டர்’ ட்ரெய்லர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர்.

“எங்க ‘தளபதி’ நடிச்ச படத்தை தான் ‘கொரோனா’வால் வெளியிட முடியல, ட்ரெய்லரையாவது ரிலீஸ் பண்ணலாமே” என்பது தான் கோடிக்கணக்கான ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது. தற்போது, ட்ரெய்லர் தொடர்பாக செம்ம மாஸ் தகவல் கிடைத்துள்ளது. படத்தின் ட்ரெய்லரை ரசிகர்களுக்கு வருகிற தீபாவளி ட்ரீட்டாக ரிலீஸ் செய்யலாம் என விஜய் முடிவெடுத்துள்ளாராம். படம் 2021 பொங்கலுக்கு ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share.