‘தளபதி’ விஜய்யுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸானது.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படமான ‘வாரிசு’வை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. விஜய்-யின் 67-வது படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

விஜய்யின் 68-வது படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் 69-வது படம் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘டான்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.