மெகா ஹிட்டான ‘மாஸ்டர்’… இந்த படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாஸ்டர்’. கடந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு ரிலீஸான இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் மெகா ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக விஜய் ரூ.80 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.