ட்விட்டரில் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்… ரசிகர்களை உஷார்படுத்திய PRO ரியாஸ் அஹமத்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் பாப்புலர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகிய இருவருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பெயரில் இருக்கும் பல அக்கவுண்ட் போலியானவை என்று விஜய் தரப்பினர் கூறியுள்ளனர்.

Share.