விஜய்யின் ‘தெறி’ படத்தின் காஸ்டியூம் டிசைனர் சத்யாவின் திருமண புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் காஸ்டியூம் டிசைனர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யா NJ. இவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, நய்யாண்டி, பிரம்மன், மான் கராத்தே, ஜிகர்தண்டா, நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், போக்கிரி ராஜா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார்.

இது தவிர தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘தெறி’ மற்றும் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ ஆகிய இரண்டு படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார் சத்யா.

காஸ்டியூம் டிசைனராக மட்டுமில்லாமல் சில படங்களில் சத்யா நடித்திருக்கிறார். இந்நிலையில், இன்று (மார்ச் 14-ஆம் தேதி) கோகிலா என்பவரை சத்யா திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. பொள்ளாச்சியில் நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான சசிக்குமார் கலந்து கொண்டாராம்.

Share.