விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணையும் திரைப்படம்!

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தரராஜன், பயணங்கள் முடிவதில்லை, ராஜாதிராஜா, வைதேகி காத்திருந்தாள், என்கிட்ட மோதாதே போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவராவார்.

இதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் மகன் தீபக் சுந்தரராஜன் தன் முதல் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் நடிகை டாப்ஸி பன்னு ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.

மேலும் காமெடி ஜானரில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் பல முன்னணி காமெடி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்களாம்.

மேலும் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீபக் சுந்தரராஜன் ஏற்கனவே இயக்குனர் விஜய்யிடம் பல ஆண்டுகளாக துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிரபல நடிகர் ஜெகபதிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

செப்டம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ளதாகவும், ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share.