விஜய் சேதுபதி மற்றும் டாப்சி இணையும் படத்தில் வந்த புது ட்விஸ்ட்!

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தரராஜன், பயணங்கள் முடிவதில்லை, ராஜாதிராஜா, வைதேகி காத்திருந்தாள், என்கிட்ட மோதாதே போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவராவார்.

தற்போது இவர் மகன் தீபக் சுந்தரராஜன் தன் முதல் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் நடிகை டாப்ஸி பன்னு ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் செய்தி வந்தது.

இதையொட்டி இந்த படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கியதாகவும் அந்த ஷூட்டிங்கில் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் செய்தி வந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா, ஜெகபதிபாபு, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துவருகிறார்கள். தற்போது இந்த படத்தில் புது ட்விஸ்ட் என்னவென்றால் இந்தப் படத்தில் வரும் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்கள் இரட்டை வேடங்களாக இருக்கும் என்றும் விஜய் சேதுபதிக்கு சங்கத்தமிழன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் இரட்டை வேடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பாசன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறார்கள்.

Share.