லாபம் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “லாபம்”.

தற்போது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7சிஎஸ் சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதிபாபு மற்றும் சாய் தன்ஷிகா நடிக்கிறார்கள்.

ராம்ஜி ஒளிப்பதிவில் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அந்தோணி இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார். செவன்.சிஎஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.

சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து வந்ததாகவும், விஜய் சேதுபதி இந்த ஷூட்டிங்கில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

தற்போது விஜய் சேதுபதியின் மீண்டும் அந்த ஷூட்டிலிருந்து வந்து லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம். தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் ஹீரோக்களில் விஜய் சேதுபதி முக்கியமான ஒருவராவார்.

Share.