விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் திரைப்படத்தின் ஷூட்டிங்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது தன் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து சியான்60 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தற்போது துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் பிசியாக இருக்கும் விக்ரம் இந்த படங்களை முடித்தவுடன் சியான்60 படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறியிருந்தார்கள்.

தற்போதைய தகவல் என்னவென்றால் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தை முடித்துள்ளார். அடுத்து இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share.