விக்ரம் படத்தை இணையத்தில் வெளியிட தடை !

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இதனால் படத்தின் மீதான மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் மொத்தமாக 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது . விக்ரம் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ரசிகர்கள் அனைவரும் ஜூன் -3ஆம் படத்தை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் .இந்நிலையில், விக்ரம் படத்தினை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விக்ரம் படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை இணையத்தில் வெளியீட தயாரிப்பு நிறுவனம் அனுமதி வழங்கவில்லை . அனுமதியின்றி இந்த படம் இணையத்தில் வெளியானால் நஷ்டம் ஏற்படும் . அது சட்டத்துக்கு எதிரானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விக்ரம் படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உள்ளது .

Share.