விக்ரம் படத்தின் புதிய அப்டேட் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா .ரஞ்சித்,நடிகர் சிலம்பரசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை நடிகர் கமலுடன் இணைந்து வெளியிடுகிறார்.

நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்தனர் . படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் விக்ரம் படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகி உள்ளது . தற்பொழுது விக்ரம் படத்தில் ரன் டைம் வெளியாகி உள்ளது . 2 மணி நேரம் 53 நிமிடங்கள் இந்த படம் இருப்பதாக தெரியவந்துள்ளது . இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் .

Share.