விக்ரம் பிரபு நடித்துள்ள ‘டாணாக்காரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ மற்றும் ‘டாணாக்காரன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘டாணாக்காரன்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இதற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.