புர்ஜ் கலிபாவில் விக்ரம் டிரெய்லர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் ,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்‌.

மேலும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். ஜூன் முன்றாம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
நடிகர் கமல் இந்த படத்தை விளம்பரபடுத்தும் வகையில் கொச்சி, டில்லி , மலேசியா என தொடர்ந்து பயணம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று துபாயில் கமல்ஹாசன் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்த உள்ளார்.துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் இன்று இரவு 8.10 மணிக்கு ‘விக்ரம்’ பட டிரைலர் திரையிடப்பட உள்ளது.

Share.