விக்ரமின் ‘கோப்ரா’ படம் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளாராம்.

இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ஏற்கனவே, இசை புயலின் இசையில் உருவான பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது. சமீபத்தில், ரிலீஸான ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Share.