விக்ரம் – ஏ.எல்.விஜய் கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான ‘தெய்வத்திருமகள்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெய்வத்திருமகள்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘கிருஷ்ணா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.48 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.