விக்ரம் – தரணி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான ‘தூள்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தூள்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தரணி இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘ஆறுமுகம்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரீமா சென், பசுபதி, விவேக், சாயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.29 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.