VJ அஞ்சனாவின் பிறந்தநாள்… ‘கோப்ரா’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவருக்கு விக்ரம் கொடுத்த சர்ப்ரைஸ்!

பிரபல டிவி சேனலான ‘சன் மியூசிக்’-யில் பாப்புலர் தொகுப்பாளினியாக இருப்பவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளால், இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸை அடிக்கடி ஷேரிட்டு வருகிறார் அஞ்சனா.

2016-ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. சந்திரன் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர். அதன் பிறகு ‘ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் சந்திரன். அஞ்சனா – சந்திரன் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) அஞ்சனாவுக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விக்ரமின் ‘கோப்ரா’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை அஞ்சனா தான் தொகுத்து வழங்கினார். இவ்விழாவின் மேடையில் வைத்தே அஞ்சனாவுக்கு விக்ரம் பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.