“என் குடும்பத்துக்காக விஜய் அண்ணா செய்த மறக்க முடியாத உதவி”… ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசிய விக்ராந்த்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ராந்த். இவர் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் உறவினராக இருந்தும், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படத்தின் இயக்குநரே ஆர்.வி.உதயக்குமார் தான்.

அது தான் ‘கற்க கசடற’. இந்த படத்துக்கு பிறகு நடிகர் விக்ராந்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தை கிள்ளாதே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டியநாடு, தாக்க தாக்க, கெத்து, கவண், தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால், சுட்டுப் பிடிக்க உத்தரவு, வெண்ணிலா கபடிகுழு 2, பக்ரீத்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சமீபத்தில், ஜீ தமிழில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் விக்ராந்த் கலந்து கொண்டார். தற்போது, இந்நிகழ்ச்சியில் விஜய் தனது குடும்பத்திற்கு செய்த மறக்க முடியாத உதவி குறித்து பேசியுள்ளார் விக்ராந்த். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.