மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகர் கார்த்தி… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விருமன்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா இயக்கியுள்ளார்.

இந்த படத்தை கார்த்தியின் அண்ணனும், முன்னணி ஹீரோவுமான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி டூயட் பாடி ஆடியுள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, சூர்யா, இயக்குநர் ஷங்கர் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது, கார்த்தி இன்று காலை மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.