விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் படம் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எனிமி’ (Enemy) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடிக்கிறார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இதனை வினோத் குமார் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

சமீபத்தில், இப்படத்தின் விஷால் மற்றும் ஆர்யாவின் செம்ம மாஸான கேரக்டர் போஸ்டர்ஸை ரிலீஸ் செய்தனர். இந்த கேரக்டர் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஹைதராபாத்தில் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் டீசர் ரிலீஸ் செய்யப்படுமாம்.

Share.