‘மார்க் ஆண்டனி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29-ஆம் தேதி) நடிகர் விஷாலின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது, ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.