லத்தி படத்துக்காக உடம்பை ஏற்றிய விஷால் !

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வீரமே வாகை சூடும் . இந்த படத்தை து. பா.சரவணன் என்பவர் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்து இருந்தார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

இதனை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆன்டனி என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக S.J.சூர்யா நடிக்க இருக்கிறார் . மாநாடு படத்தில் வில்லனாக நடித்து பிறகு தொடர்ந்து வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது . அந்த வகையில் இந்த படத்திலும் S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் .

இந்த நிலையில் நடிகர் விஷால் மற்றும் S.J.சூர்யா ஆகிய இருவருமே இரட்டை வேடத்தில் நடித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாக இருக்கிறது . இரண்டு கால கட்டத்தில் நடப்பது போல் இந்த கதை நடக்க இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

தற்போது நடிகர் விஷால் லத்தி படத்தில் நடித்து வருகிறார் . சுனைனா இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . இளைய திலகம் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் இன்ட்ரோ காட்சிகள் தற்போது படப்பிடிப்பில் உள்ளது . இதில் நடக்கும் சண்டைக்காட்சிக்காக விஷால் தயாராகி தனது உடம்பை பிட்டாக வைத்துள்ளார் . அந்த செட்டில் எடுத்த புகைப்படத்தை தற்போது இணயத்தில் பகிர்ந்து உள்ளார் . தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Share.