“மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன், மனைவியாக இருப்பீர்களா?”ன்னு கேட்ட தொழிலதிபர்… கண்ணீர் விட்டு அழுத விஷால் பட நடிகை!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நீத்து சந்திரா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘யாவரும் நலம்’. இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் குமார் இயக்க, ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார்.

‘யாவரும் நலம்’ படத்துக்கு பிறகு நடிகை நீத்து சந்திராவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா.COM’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நீத்து சந்திரா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், கன்னடம், போஜ்புரி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவரின் கால்ஷீட் டைரியில் எந்த படங்களும் இல்லை.

இந்நிலையில், நீத்து சந்திரா மீடியாவுக்கு கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் “ஒரு பிரபல தொழிலதிபர் என்னிடம் மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன், எனக்கு மனைவியாக இருப்பீர்களா?ன்னு கேட்டாரு. அது எனக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சு” என்று கூறியுள்ளார்.

Share.