விரைவில் பொதுக்குழு கூட்டம் ! விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷால் .அதன் பிறகு சண்டை கோழி ,திமிரு , தாமிரபரணி போன்ற வெற்றி படங்களை கொடுத்தார் . 2018 ஆம் ஆண்டு வெளியான இருபுதிரைக்கு பிறகு இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை.

சண்டக்கோழி 2, அயோக்கியா , ஆக்‌ஷன்,சக்ரா ,எனிமி போன்ற படங்கள் வெற்றி பெறவில்லை . இதனை அடுத்து வெளியான வீரமே வாங்கி சூடம் படமும் தோல்வியை தழுவியது .இந்த படத்தை து பா சரவணன் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷாலின் லத்தி , துப்பறிவாளன் ஆகிய படங்கள் படப்பிடிப்பில் உள்ளன . சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் தற்பொழுது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்ட முடிவு செய்துள்ளார். மேலும் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது ,ஏற்கனவே நடிகர் அஜித் அவரது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காக கேரளா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.