விஷாலின் ‘எனிமி’யாக ஆர்யா… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த போஸ்டர்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘சக்ரா, துப்பறிவாளன் 2’ மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எனிமி’ (Enemy) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடிக்கிறார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கிறார். மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இதனை வினோத் குமார் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 17-ஆம் தேதி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, ஆர்யாவின் கேரக்டர் போஸ்டரை இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.