அடேங்கப்பா இத்தனை கோடியா?… ரிலீஸான 2 நாட்களில் ‘எனிமி’ செய்த வசூல் சாதனை!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி சார்ஜ்’ மற்றும் ‘எனிமி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள ‘எனிமி’ (Enemy) திரைப்படம் நேற்று முன் தினம் (நவம்பர் 4-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடித்திருந்தார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடித்திருந்தார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.

இதனை வினோத் குமார் தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.