விஷாலின் ‘லத்தி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘லத்தி’ படத்தை இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பாப்புலர் நடிகைகளில் ஒருவரான சுனைனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் ‘இளைய திலகம்’ பிரபு நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியம் – பாலகிருஷ்ணா தோட்டா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘RANA புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் டீசரை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.