அடேங்கப்பா… ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. அதன் பிறகு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா, எனிமி, வீரமே வாகை சூடும்’ என படங்கள் குவிந்தது.

விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அயோக்யா’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்திற்காக விஷால் ரூ.9 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.