லண்டனில் ஆரம்பமாகப்போகும் ‘துப்பறிவாளன் 2’ ஷூட்டிங்… பக்கா ப்ளான் போட்ட விஷால்!

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும். தற்போது, தமிழில் பல பார்ட் 2 படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் ‘துப்பறிவாளன் 2’. 2017-யில் நடிகர் விஷால் – இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படத்தின் பார்ட் 2-விலும் விஷால் – மிஷ்கின் இணைந்தே முதலில் பணியாற்றி வந்தனர். பின், சில கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் விலகிக் கொண்டார்.

அதன் பிறகு விஷாலே படத்தை இயக்கலாம் என திட்டமிட்டு, இயக்குநர் அவதாரம் எடுத்தார். தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை லண்டனில் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தவிர விஷால் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’, ‘லத்தி சார்ஜ்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.