விஷ்ணு – ராணா டகுபதி நடித்துள்ள ‘காடன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, காடன், ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘காடன்’ என்ற படம் வருகிற மார்ச் மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று சமீபத்தில் விஷ்ணு விஷால் அறிவித்திருந்தார். தற்போது, படத்தின் ட்ரெய்லரை விஷ்ணு ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ராணா டகுபதி, ஜோயா ஹூசைன், ஸ்ரியா பில்கோங்கர் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புவன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாகிறதாம்.

Share.