பிரபல நடிகர் விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டாவின் திருமணம் எப்போது?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, காடன், ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2010-யில் ரஜினி என்பவரை விஷ்ணு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். பின், ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் விஷ்ணு விஷால். இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் காதலித்து வந்தார்கள்.

கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 7-ஆம் தேதி ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில், விஷ்ணுவும், ஜூவாலா கட்டாவும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். அங்கு எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, விஷ்ணு – ஜூவாலா கட்டாவின் திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.