நானிக்கு பதிலாக நடித்த விஷ்ணு விஷால்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன், காடன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

விஷ்ணு விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இன்று நேற்று நாளை’. இதில் ஹீரோயினாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென ரவிக்குமாரின் முதல் சாய்ஸாக இருந்தது பிரபல தெலுங்கு நடிகர் நானி தானாம். நானிக்கும் கதை பிடித்து விட்டதாம். இருப்பினும் நானி கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தர மறுத்ததால், அவர் நடிக்கவில்லையாம்.

Share.