அடேங்கப்பா… 6 நாட்களில் விஷ்ணுவின் ‘FIR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘FIR’ படம் திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், ரைசா, மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்த இதற்கு அஷ்வத் இசையமைத்திருந்தார், பிரசன்னா GK படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்த படத்தை விஷ்ணு விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.8.91 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.