விஷ்ணு – அமலா பால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ராட்சசன்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2, கட்டா குஸ்தி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. விஷ்ணு விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ராட்சசன்’.

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராம் குமார் இதனை இயக்கியிருந்தார். இதில் விஷ்ணு விஷால் போலீஸாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் உலக அளவில் ரூ.39 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.