விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மோகன்தாஸ்’ படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷாலே தனது ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் மலையாளத்தில் பாப்புலர் நடிகர்களில் ஒருவரான இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளாராம். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து வருகிறார், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நடிகர் கார்த்தியும் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த மிரட்டலான டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.