ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் VJ அஞ்சனா… தீயாய் பரவும் வீடியோஸ்!

பிரபல டிவி சேனலான ‘சன் மியூசிக்’-கில் பாப்புலர் தொகுப்பாளினியாக இருப்பவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளால், இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸை அடிக்கடி ஷேரிட்டு வருகிறார் அஞ்சனா.

2016-ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. சந்திரன் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர். அதன் பிறகு ‘ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் சந்திரன். அஞ்சனா – சந்திரன் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது, அஞ்சனா ரங்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த மூன்று வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த வொர்க் அவுட் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், நம்ம VJ அஞ்சனா ரங்கனா இது என ஆச்சர்யப்படுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Share.