படுக்கைக்கு அழைத்த நபர்.. போலீஸில் புகார் கொடுத்த VJ அஞ்சனா!

பிரபல டிவி சேனலான ‘சன் மியூசிக்’-யில் பாப்புலர் தொகுப்பாளினியாக இருப்பவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளால், இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸை அடிக்கடி ஷேரிட்டு வருகிறார் அஞ்சனா.

2016-ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. சந்திரன் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர். அதன் பிறகு ‘ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் சந்திரன். அஞ்சனா – சந்திரன் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது, அஞ்சனாவை ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் மூலம் படுக்கைக்கு அழைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அஞ்சனாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பல முறை பிளாக் செய்த பிறகு, தன்னுடைய மொபைல் நம்பருக்கே அந்த நபர் மெசேஜ் அனுப்புவதாகவும், அடிக்கடி போன் பண்ணுவதாகவும் அஞ்சனா கூறியுள்ளார். ஏற்கனவே, அந்த நபர் மீது சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டதாம். இப்போது அந்த நபரின் போன் நம்பரை கொடுத்து போலீஸில் புகார் அளித்துள்ளராம் அஞ்சனா.

Share.