ஜிம்மில் எடுத்த அசத்தலான வீடியோவை ஷேரிட்ட VJ ரம்யா… குவியும் லைக்ஸ்!

பிரபல தொகுப்பாளினி டு நடிகை என தன் வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவரின் சினிமா கேரியரில் ஹைலைட்டாக அமைந்த படங்கள் ‘கேம் ஓவர்’ மற்றும் ‘ஆடை’. ‘கேம் ஓவர்’ படத்தில் வர்ஷா என்ற ரோலிலும், ‘ஆடை’ படத்தில் ‘ஜெனிஃபர்’ என்ற ரோலிலும் சூப்பராக நடித்திருந்தார் ரம்யா சுப்ரமணியன்.

இந்த இரண்டு படங்களுமே அவரின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்ததால், ரம்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக ரம்யாவின் கால்ஷீட் டைரியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ இணைந்தது. விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த இப்படம் இந்த ஆண்டு (2021) ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும், ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

தற்போது, ரம்யா சுப்ரமணியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஜிம் அதே தான். ஆனா, தினமும் போட்டுக்குற dress மட்டும் different” என்று குறிப்பிட்டு ஜிம்மில் எடுத்த அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்ததுடன், சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

3

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

Share.