தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ‘ப்ளூ சட்டை’ மாறன் அஜித்தின் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா?

யூ டியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். சமீபத்தில் இவர் வெள்ளித்திரையில் என்ட்ரியானார். இவர் இயக்கிய முதல் படமான ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருந்தார். இதில் ‘ப்ளூ சட்டை’ மாறனுடன் இணைந்து ராதாரவி, ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துராமன் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘வலிமை’. இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்ததுடன், அஜித் பற்றியும் தவறாக பேசியிருந்தார் ‘ப்ளூ சட்டை’ மாறன். இந்நிலையில், சென்னையிலுள்ள PVR தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ‘ப்ளூ சட்டை’ மாறனை அஜித்தின் ரசிகர்கள் தாக்கியதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

தற்போது, இது தொடர்பாக ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் “PVR-ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ…வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி” என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தாக்கப்படவில்லை, பரவிய செய்தி வதந்தி தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share.