நடிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் . தற்பொழுது இவர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் . சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் நடிகை அபர்ணா தாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தின் முன்பதிவு தமிழ்நாடு முழுவதும் விறு விறுப்பாக நடந்து வருகிறது . பல இடங்களில் முன் பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் முடிவடைந்தது .மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில் நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட் படப்பிடிப்பின் பொழுது நடந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார் . தன்னோட பிறந்த நாளை பீஸ்ட் படப்பிடிப்பு தலத்தில் தான் கொண்டாடினேன், கேக் எல்லாம் வெட்டி முடித்த பிறகு சதிஷ் விஜய்யிடம் எங்களை உங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஒரு ரைடு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் .விஜய் அதுக்கு ஒப்புக்கொண்டு தன்னையும் , நடிகை பூஜா ஹெக்டே, சதிஷ், மனோஜ் , நெல்சன் எல்லோரையும் காரில் அழைத்து சென்றதாக கூறி உள்ளார் .

இதனை விஜய் ரசிகர்கள் தங்களது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் . மேலும் நடிகர் விஜயை பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டு இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Share.