லிங்குசாமிக்கு எதிரான வழக்கின் தற்போதைய நிலை என்ன ?

2001-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ஆனந்தம். இந்த படம் லிங்குசாமி அவர்களின் முதல் படம் . நடிகர்கள் மம்மூட்டி , முரளி , அப்பாஸ் , நடிகைகள் தேவயானி , ரோஜா , சினேகா ஆகியோர் நடித்து இருந்தனர் . எஸ்.எ.ராஜ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . முற்றிலும் குடும்பத்தில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்து இருந்தது.

இந்த படத்தை பல படங்களை இவர் இயக்கி உள்ளார் . சில படங்களை திருப்பதி பிரதர்ஸ் என்கிற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார் . அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால் அந்த கடனை திருப்பி தரவில்லை லிங்குசாமி இதனால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த இயக்குனர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த பிறகு இயக்குனர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்துள்ளது , இந்த காரணத்தினால் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை தந்துள்ளது . இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அறிக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .

Share.