என்ன செய்யப்போகிறார் சிவகார்த்திகேயன் !

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’ . இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கான சம்பளமாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது . ஆனால் கூறிய சம்பளத்தை தராமல் 11 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், மீதம் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதற்கு ‛மிஸ்டர்லோக்கல்’ படத்தின் கதையே தனக்கு பிடிக்கவில்லை.‛மிஸ்டர்லோக்கல்’ படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே அந்த படத்தை தாயேரித்தேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார் . மேலும் மூன்றாண்டுகளாக வழக்கு தொடராமல் இப்போது சிகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தது ஏன் என்றும் நிறைய உண்மைகளை சிவகார்த்திகேயன் கூறவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? எனவும் சிவகார்த்திகேயனிடம் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் சிவகார்த்தியேன் அடுத்த என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

Share.