அஜித் 61 படத்தின் தற்போதைய நிலை என்ன ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

 


சென்னை , ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹாங்காங் நகரில் நடக்க இருக்கிறது . செப்டம்பர் 24-ஆம் தேதி அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்பப்படுகிறது .மேலும் நவம்பர் மாதம் படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Share.