7 வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அஜித் படம் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிய உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார் மேலும் வருகின்ற தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் .

நடிகர் அஜித் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வேதாளம் படம் வெளியானது . சுமார் ஏழு வருடத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Share.