சிவகார்த்திகேயனால் மாட்டிக்கொண்ட சிம்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் வருகின்ற மே 13ம் தேதி வெளியாக இருக்கிறது . இந்த நிலையில் சமீபத்தில் மிஸ்டர். லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா மீது வழுக்கு ஒன்றை தொடர்ந்தார் சிவகார்த்திகேயன் . அதில் மிஸ்டர். லோக்கல் படத்திற்காக தனக்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில்,ரூ.11 கோடி மட்டுமே
கொடுத்ததாகவும், ரூ.4 கோடியை தராமல் பாக்கி வைத்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார் . மேலும் கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உள்ள பத்து தல மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஆகிய படங்களுக்கு தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தருகிற வரையில் அந்த படங்களுக்கு முதலீடு செய்ய கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து சிம்பு தொடர்ந்த நடிக்க பல படங்களை ஒப்புக்கொண்டுள்ளார் . அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்துக்கொண்டு இருக்கிறார் . இந்த படத்தை தொடர்ந்து கே. இ. ஞானவேல் தயாரிப்பில் பத்து தல படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது போடப்பட்டுள்ள வழக்கின் காரணமாக பத்து தல தொடுங்குமா என்ற கேள்வி உருவாகி இருக்கிறது . மேலும் இதே நிலைமையில் தான் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கும் ஏற்பட்டு இருக்கிறது . இதன் காரணமாக சிம்பு மற்றும் விக்ரம் ரசிகர்கள் சற்று கவலையில் இருக்கின்றனர் . விரைவில் இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்குமா என்று குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Share.