அடுத்து அடுத்து வெளியாகும் விஜய் சேதுபதி படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல மொழிகளில் படம் நடித்து வருகிறார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் கடைசி விவசாயி . இந்த படத்தை மணிகண்டன் இயக்கினார் . இதனை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி இவருடைய நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் வெளியாக இருக்கிறது . வட இந்தியாவில் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி . இந்நிலையில் இந்த படத்தை விளம்பர படுத்த விஜய் சேதுபதி சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் இன்னும் 40 நாட்களில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது . மேலும் விஜய் சேதுபதி – கமல் இணைந்து நடித்து இருக்கும் விக்ரம் படம் ஜூன் 03 ஆம் தேதி வெளியாக உள்ளது அதை தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி மாமனிதன் படம் வெளியாக இருக்கிறது .

விஜய் சேதுபதியின் படங்கள் அடுத்து அடுத்து வெளியாக உள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் .

Share.