கமலின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் ?

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் . விஜய் சேதுபதி , ஃபகத் பாசில், நரைன் , காளிதாஸ் ஜெயராம் ,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது .

வருகின்ற ஜூன் 03ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது . உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிடுகிறார் . மேலும் பெரிய தொகைக்கு இந்த படத்தை விஜய் டிவி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியது .

இந்த நிலையில் நடிகர் கமல் தனது தயாரிப்பு நிறுவனத்தில் படங்களை தயாரிக்கும் முயற்சியிலும் தீவிரமாக உள்ளார் . சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும் , முத்தையா இயக்கத்தில் ஆர்யாவை வைத்து ஒரு படமும் தயாரிக்கிறார் .இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கிறது .

விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் கடைசியாக சார்பட்டா பரம்பரை என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார் . இதனை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் . இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின் நடிகர் கமல் படத்தை ஆரம்பிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது .

Share.