இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு பதிலாக நடிக்க போவது யார் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . விக்ரம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமலின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது . இதனை கருத்தில் கொண்டு இந்தியன் 2 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடிக்க உள்ளனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் . பூஜையுடன் இந்த படம் மீண்டும் தொடங்கியுள்ளது .

இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் முக்கியமான பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் . பாதியில் இந்த படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது . அந்த சமயத்தில் நடிகர் விவேக் காலமானார் . இதனால் அந்த வேடத்தில் யார் நடிப்பார்கள் என்று கேள்வி இருந்த நிலையில் நடிகர் குரு சோமசுந்தரம் அந்த பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Share.