தலைவர் 169 படத்தின் இயக்குனர் யார் ?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் .
விஜய் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்களே விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நெல்சன் பீஸ்ட் படத்திற்கு முன்பு கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பொதுவான ரசிகர்களும் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து பீஸ்ட் படத்தை பார்க்க சென்றார்கள் . ஆனால் பீஸ்ட் படம் அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

இதனால் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தையும் நெல்சன் தான் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை பார்த்துள்ளார் மேலும் அந்த படம் அவருக்கு பிடிக்கவில்லை எனவே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுக்கப்போவதில்லை என்றும் ரஜினியின் அடுத்த படத்தை அட்லீ அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக தகவல் வெளியாகின.

ஆனால் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் கணக்கில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தின் இயக்குனர் என்று போட்டு இருந்தார் இன்று அதில் தலைவர் 169 படத்தையும் சேர்த்துள்ளார். இதனால் நெல்சன் தான் தலைவர் 169 படத்தின் இயக்குனர் என்பது உறுதியாகி உள்ளது.

Share.