வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்!

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படம் பற்றின பல தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது . அந்த வகையில் தளபதி 66 படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க போவதாகவும் , அதில் ஒரு கதாபாத்திரத்தில் இளமையான தோற்றத்திலும் மற்றொருவர் கதாபாத்திரத்தில் எரோடோமேனியா என்கிற நோயினால் பாதிக்க பட்டவராக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது .

சமீபத்தில் தளபதி 66 படத்தில் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது . நடிகர் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் யார் நடிக்கிறார் என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை . இருந்தாலும் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, மற்றும் நடிகை தமன்னா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .

தெலுங்கு இயக்குனர் வம்ஷி இயக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் . நடிகர் விஜய் படத்திற்கு தமன் இசையமைப்பது இது முதல் முறையாகும் . தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் உருவாகும் என்று நம்பப்படுகிறது .

Share.